கல்முனையில் அதிகளவான பாறைக்குட்டி மீன்கள்!
அம்பாறை, கல்முனை கடற்பரப்பில் கரைவலை தோணிகளுக்கு அதிகளவான பாறைக்குட்டி வகை மீன்கள் இன்றைய தினம் (26) பிடிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இப் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளை ஸ்தம்பிதமடைந்திரந்த நிலையில், நீணட நாட்களின் பின்னர் கரைவலை மீனவர்களுக்கு இவ்வகை மீன்கள் இன்றைய தினம் அதிகளவில் பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
குறித்த மீன்கள் உள்ளூர் சந்தையில் ஒரு கிலோ 300 ருபாவிற்கு விற்பனையாவதுடன் மேலதிக மீனகள் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக குளிரூட்டி வாகனம் மூலம் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
( எம் . என். எம். அப்ராஸ் )