கபீர் ஹஷிமும் ராஜினாமா !
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாஷிம் தனது கட்சி மற்றும் அமைச்சுப் பொறுப்புகளை ராஜினாமா செய்துள்ளார்.
ஏற்கனவே அமைச்சர்கள் மலிக் , மங்கள , ருவன் , ஹரீன் , அஜித் பெரேரா ஆகியோர் ராஜினாமா செய்துள்ள நிலையில் இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது.
அமைச்சர் சம்பிக்க மற்றும் சில அமைச்சர்மாரும் பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளனர். பெரும்பாலான அமைச்சர்கள் பலர் பிரதமர் ரணிலை பதவி விலக கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை புதிய ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் அமைச்சரவை அமைப்பது குறித்து மஹிந்த ராஜபக்ச ரணில் மற்றும் சபாநாயகருடன் பேச்சு நடத்தவுள்ளார்.