கணவருடன் ஆலயத்திற்கு சென்ற மனைவிக்கு நேர்ந்த பரிதாபம்
தனது கணவருடன் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்து ஆலயத்திற்கு சென்றுக்கொண்டிருந்த பெண்ணொருவர் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ள சம்பவமொன்று நேற்றைய தினம் (30) வாகரை பகுதியில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தில் 58 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கணவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, குறித்த பெண் தவறுதலாக மயக்கமுற்று கீழே விழுந்து படுகாயமடைந்துள்ள நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எவ்வாறாயினும், குறித்த பெண் சிகிச்சைப் பலனின்றி இன்று (31) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.