கட்டாரில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் இலங்கையர் அல்ல
டோகா கட்டாரில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் இலங்கையர் அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் கட்டாரிலுள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைவரான பிரதேச பொலிஸாரிடம் வினவியதன் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் இலங்கை பிரஜை அல்ல என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியிருந்தனர்.
மேலும் குறித்த பகுதியிலுள்ள வைத்தியசாலைகளை பரிசோதித்த போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இலங்கை பிரஜையின் சடலம் எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.