கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இணக்கமில்லை – நாளை மீண்டும் ரணில் தலைமையில் கூட்டம் !
ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம் குறித்து பேசுவதற்காக இன்று பிரதமர் ரணில் தலைமையில் அலரி மாளிகையில் நடந்த கூட்டம் முடிவுகள் எதுவும் எட்டப்படாமல் முடிவடைந்தது.
பெரும்பாலான கட்சித் தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் நாளை மீண்டும் கூடுவதென தீர்மானிக்கப்பட்டது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான யோசனை குறித்து இன்றைய கூட்டத்தில் பேசப்பட்டுள்ளது.