கஞ்சிப்பான இம்ரான் சிறைக்குள் உண்ணாவிரதப் போராட்டம் !
பூஸா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பாதாள உலக கோஷ்டியின் முக்கியஸ்தர் கஞ்சிப்பான இம்ரான் , தனது தந்தையார் மற்றும் சகோதரன் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டு உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
சிறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி அவர்களை விடுதலை செய்யும் வரை இந்த உண்ணாவிரதம் தொடருமென அவர் தெரிவித்ததாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவித்தன.
இதேவேளை இம்ரானுக்கு உணவு எடுத்துச் சென்ற பிளாஸ்ரிக் வாளி ஒன்றுக்குள் மறைவாக வைக்கப்பட்டிருந்த தொலைபேசிகள் குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தனியே விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறிப்பிட்ட வாளிக்குள் மறைவிடம் ஒன்றை தயாரித்த தொழிற்சாலை குறித்து பொலிஸ் தேட ஆரம்பித்துள்ளது.இலகுவில் கண்டுபிடிக்க முடியாத வகையில் வாளியின் அடிப்பாகத்தில் இந்த தொலைபேசிகள் மற்றும் சார்ஜர்கள் வைக்கப்பட்டிருந்தன.