கங்கைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு – மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் !
தொடர்மழை காரணமாக நில்வலா – கிங் – களு கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் கரையோரப் பகுதிகளை அண்டி இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
காலி மாவட்டத்தின் எல்பிட்டி ,நியாகம,நாகொட,இமதுவ ,பத்தேகம, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள ,வளல்லவிற்ற,மத்துகம , அகலவத்த பகுதிகளில் மண்சரிவு அபாயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்றிரவு மேல் , சபரகமுவ , தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.