ஓய்வை அறிவித்தார் தில்ருவன் பெரேரா..!
சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் சகலதுறை வீரர் தில்ருவன் பெரேரா அறிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா கிரிக்கட் சபைக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ள தில்ருவன் பெரேரா, சர்வதேச கிரிக்கட் பயணத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கான சரியாக தருணம் இதுவெனவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இன்னும் சிறிது காலம் உள்நாட்டு கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
39 வயதான தில்ருவன் பெரேரா இறுதியாக காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கெதிராக 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.