ஒமிக்ரோன் பரவலை எதிர்கொள்ள சுகாதார கட்டமைப்பு தயார் – கெஹெலிய ரம்புக்வெல்ல
ஒமிக்ரோன் பிறழ்வை எதிர்நோக்கும் வகையில் நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பு தயாராகவிருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் வீட்டிலேயே சிகிச்சை வழங்கும் நடைமுறைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.