ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் முதலிடம்
ஐ.சி.சி. டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
டெஸ்ட் தரவரிசைக்கான பட்டியலை ஐ.சி.சி .இன்று (16) வெளியிட்டுள்ளது.
துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனைப் பின்தள்ளி ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தைப் பிடித்துள்ளார். ஸ்மித் 891 புள்ளிகளுடனும், வில்லியம்சன் 886 புள்ளிகளுடனும் முறையே முதலிரண்டு இடத்தில் உள்ளனர்.