ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு பாகிஸ்தான் விமானங்களுக்குத் தடை
பாகிஸ்தான் விமானங்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய விமான பாதுகாப்பு அமைப்பினால் ஆறு மாதங்களுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிற்கு சொந்தமான Pakistan International Airlines இல் பணிபுரியும் விமான ஊழியர்கள் பலர், உரிமம் மோசடியில் ஈடுப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்தே Pakistan International Airlines விமானங்கள் ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிற்கு சொந்தமான விமான சேவைகளில் பணிபுரிந்து வந்த 860 விமானிகளில் 262 பேர் போலியான உரிமம் மற்றும் விமானி தேர்வில் மோசடியில் ஈடுப்பட்டுள்ளமை கண்டறிப்பட்டது.
பாகிஸ்தானின் தெற்கு துறைமுகமான கராச்சியில் கடந்த மே மாதம் 22ஆம் திகதி Airbus A320 விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 97 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் போதே, குறித்த மோசடி கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.