எதிர்த் தரப்பு உறுப்பினர்களுக்கு பிரதமர் வழங்கிய ஆலோனை
பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி நாடாளுமன்ற கட்டடதொகுதியில் இன்று (06) ஆர்ப்பாட்டம் செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஆர்ப்பாட்ட இடத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து சுமூகமான கலந்துரையாடலொன்றை முன்னெடுத்துள்ளாா்.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கமைக்கும்போது இதைவிட அதிகமான உறுப்பினர்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கூறியுள்ளாா்.
பல்வேறு காலப்பகுதிகளில் தன்னுடன் அரசியல் போராட்டங்களில் கலந்துகொண்ட உறுப்பினர்களுடன் கடந்த காலங்களில் இவ்வாறான இடங்களில் பங்குப்பற்றிய விதம் தொடர்பில் நினைவுப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளாா்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, இம்தியாஸ் பாக்கிர் மாக்காா், பாட்டளி சம்பிக்க ரணவக்க உள்ளிடோருடன் இவ்வாறு கலந்துரையாடியுள்ளாா்.