’எஞ்சாயி என் சாமி’ அமமுக வெர்ஷனை பாத்தீங்களா? இப்போ இதுதான் ட்ரெண்டிங்!
தமிழில் தனி இசைப் பாடல்கள் அரிதாகவே வெளிவருகின்றன. இதனால் அவை எப்போதாவது தான் ஹிட்டாகின்றன. அந்த வகையில் தெருக்குரல் அறிவு எழுதி, பாடகி தீ குரலில் வெளியான ‘எஞ்சாயி என் சாமி’ பாடல் உலக அளவில் வைரலாகி இருக்கிறது. யூ-டியூபில் வெளியான ஒரு வாரத்திலேயே 2 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். நமது நாட்டுப்புறப் பாடலை ஆப்பிரிக்க பாணியிலான ராப் இசையோடு கலந்து உருவாக்கியிருக்கின்றனர்.
“எஞ்சாயி என் சாமி” பாடலை காண இங்கே அழுத்தவும்
இதனை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரித்துள்ளார். இந்தப் பாடலை அமமுக கட்சியினர் தங்களின் தேர்தல் பிரச்சாரத்திற்கு ஏற்றவாறு வரிகளை எழுதி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
- தேர்தல் பிரச்சாரத்திற்கு “எஞ்சாயி என் சாமி” பாடலை கையிலெடுத்த அமமுக
- தமிழக அரசியல் கட்சிகள், தலைவர்களை சரமாரியாக விமர்சனம்
- சமூக வலைதளங்களில் பேசுபொருளான அமமுக வெர்ஷன்
இதில் தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின், கமல் ஹாசன், சீமான், உதயநிதி உள்ளிட்ட தலைவர்கள் யாரையும் விட்டுவைக்கவில்லை.
— குருநாதா⚡⚡ (@gurunathaa4) March 27, 2021