உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- பரிசீலனை குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான பரிசீலனை குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 15 ஆம் திகதி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவிருந்தது.
எவ்வாறாயினும்,மேலதிக பரிசீலனைக்காக பரிசீலனை குழு இரண்டு வார கால அவகாசத்தினை பெற்றிருந்த நிலையிலேயே இன்றைய தினம் குறித்த பரிசீலனை குழுவின் அறிக்கை ஜனாதபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.