இவ்வார இராசி பலன்கள்
மேஷ ராசி அன்பர்களே!
பல வகைகளிலும் அனுகூலமான வாரம். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் உடல் அசதியும் மனதில் சோர்வும் உண்டாகும். வாரப் பிற்பகுதியில் அதிகாரிகளின் ஆதரவால் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருக்கும். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாகவே இருக்கும். பெண்களுக்கு பிரச்சினை இல்லாத வாரம். புகுந்தவீட்டு உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.
ரிஷப ராசி அன்பர்களே!
உறவினர்கள் மூலம் நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளைப் பற்றி இருந்துவந்த மனக்கவலை நீங்கும். வாரப் பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். நிர்வாகத்தினரின் பாராமுகம் அவ்வப்போது சோர்வை ஏற்படுத்தும். வாரப் பிற்பகுதியில் அலுவலகத்தில் எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். வியாபாரத்தில் கடன் வாங்கி முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். பாராமுகமாக இருந்த புகுந்தவீட்டு உறவினர்கள் அன்பாகவும் அனுசரணையாகவும் நடந்துகொள்வர்.
மிதுன ராசி அன்பர்களே!
நீண்டநாட்களாக எதிர்பார்த் திருந்த நல்ல செய்தி வந்துசேரும். வார பிற்பகுதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பணவரவு அதிகரிக்கும். தடைப்பட்டுவந்த சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் பணிகளில் உதவி செய்வது ஆறுதலாக இருக்கும். வியாபாரம் சற்று சுமாராகத்தான் இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிசெய்ய வேண்டாம். முக்கிய பிரமுகர்கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாகும் வாய்ப்பு ஏற்படும். பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்கவேண்டி வரும். சகோதரர்களிடம் கேட்ட பண உதவி கிடைக்கும்.
கடக ராசி அன்பர்களே!
அதிர்ஷ்டம் தரும் வாரம். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. திருமண வயதிலுள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் நீண்டநாட்களாக எதிர்பார்த்த சலுகைகளும் பதவி உயர்வும் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். சக ஊழியர்களிடம் சொந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். வாடிக்கையாளர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என்பதால் பொறுமை அவசியம். பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். உங்கள் முயற்சிகளுக்கு பெற்றோரின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டு.
சிம்ம ராசி அன்பர்களே!
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பணவசதி போதுமான அளவு இருக்கும் என்பதால் செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் எதுவும் இருக்காது. பிள்ளைகளால் சில பிரச்சினைகளும் தேவையற்ற செலவுகளும் ஏற்படும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்துக் காத்திருந்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. நிர்வாகத்தினரின் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் இலாபமும் அதிகரிக்கும். ஆனால், பணியாளர்களால் சில வீண்செலவுகளும் ஏற்படும். சக வியாபாரிகள் மற்றும் பங்குதாரர்களிடம் அனுசரணையாகச் செல்வது நல்லது. பெண்களுக்கு மனதில் அவ்வப்போது இலேசான சோர்வு ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.
கன்னி ராசி அன்பர்களே!
மன நிம்மதி தரும் வாரம். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்டநாட்களாகச் சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை. அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். சில சலுகைகள் கிடைக்கும். உங்கள் ஆலோசனைகள் நிர்வாகத்தினரின் பாராட்டு பெறும். சிலருக்கு இடமாறுதல் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். புதிய முதலீடுகள் செய்வதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். பங்குதாரர்கள் அனுசரணையாக இருப்பார்கள். பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். எதிர்பார்த்த சுபச் செய்தி ஒன்று கிடைக்கக்கூடும்.
துலா ராசி அன்பர்களே!
பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தை வழி உறவினர்களுடன் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். வீட்டில் பராமரிப்புப் பணிகளின் காரணமாக உடல் அசதி உண்டாகும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக பணியாளர்கள் மத்தியில் உங்கள் கௌரவம் உயரும். உங்கள் ஆலோசனைக்கு நிர்வாகத்தினர் முக்கியத்துவம் தருவார்கள். வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும். சிலருக்கு வியாபாரம் தொடர்பான தொலைதூரப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். பணியாளர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கும். செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் இருக்காது.
விருச்சிக ராசி அன்பர்களே!
எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஆனால், கடன்கள் விஷயத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது அவசியம். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் விடுமுறையில் செல்வதால், அவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்க்க நேரிடும். அலுவலக விடயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தை அபிவிருத்தி செய்யவோ அல்லது வேறு இடத்துக்கு மாற்றவோ நினைத்திருந்தால் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். சகோதர வகையில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கான வாய்ப்புண்டு.
தனுசு ராசி அன்பர்களே!
வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும் என்றாலும் உரிய சிகிச்சையின் மூலம் உடனே நிவாரணம் கிடைத்துவிடும். வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கில்லை. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். மற்றவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவியாக இருப்பார்கள். பதவி உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். பணியாளர்கள் விடுமுறையில் செல்வதால், அவர்களுடைய வேலைகளையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். பிறந்த வீட்டிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும்.
மகர ராசி அன்பர்களே!
மனதில் அவ்வப்போது தேவை இல்லாமல் தோன்றும் குழப்பங்களால் குடும்ப நிர்வாகத்தில் முழு கவனம் செலுத்தமுடியாது. பணவசதி திருப்திகரமாக இருந்தாலும், பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பைக் கரைக்கும். வெளியில் செல்லும்போது கொண்டுசெல்லும் பொருட்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். அலுவலகத்தில் சற்று இறுக்கமான சூழ்நிலையே காணப்படும். பணிச்சுமை அதிகரிக்கும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் சில பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். வியா பாரத்தை விரிவுபடுத்தச் சாதகமான வாரம். தேவையான நிதியுதவி கிடைக்கும். வாடிக்கை யாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். விற்பனையும் இலாபமும் அதிக ரிக்கும். பெண்களுக்கு சற்று பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். கணவரின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும்.
கும்ப ராசி அன்பர்களே!
பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கணவன் – மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. நண்பர்கள் மூலம் பிற்காலத்தில் ஆதாயம் தரக்கூடிய தகவல் ஒன்று கிடைக்க வாய்ப்புண்டு. அலுவலகத்தில் உங்கள் பணிகளில் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைப்பதற்கு வாய்ப்புண்டு. வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். சக வியாபாரிகளுடன் அனுசரித்துச் செல்லவும். பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.
மீன ராசி அன்பர்களே!
வாரப் பிற்பகுதியில் அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்புண்டு. சிலருக்கு நண்பர்களின் சந்திப்பும் அவர்கள் மூலம் ஆதாயமும் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பிறகு சாதகமாக முடியும். சக ஊழியர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதில் கவனம் தேவை. பங்குதாரர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும்.