இவ்வார இராசி பலன்கள்
மேஷ ராசி அன்பர்களே!
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ளவேண்டி வரும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அரசாங்க வகையில் இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளவும். அதிகாரிகள் அவ்வப்போது கண்டிப்பு காட்டுவார்கள். வியாபாரத்தில் இலாபம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்காது என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதில் சற்று சுணக்கம் ஏற்படக்கூடும். பெண்களுக்கு மனதில் அவ்வப்போது லேசான சோர்வு ஏற்பட்டு நீங்கும். பணியில் இருக்கும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
ரிஷப ராசி அன்பர்களே!
பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உறவினர், நண்பர்கள் மூலம் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். ஒருசிலருக்கு பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் சாத்தியமுண்டு. வியாபாரத்தில் முக்கிய முடிவுகள் எதையும் இப்போது எடுக்கவேண்டாம். வாடிக்கையாளர்கள் அனுசரணையாக இருப்பார்கள். நெருக்கடியான நிலையிலும் பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் தரும் வாரம். புகுந்தவீட்டு உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
மிதுன ராசி அன்பர்களே!
பொருளாதார நிலை நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படாது. கடந்த சில நாட்களாகக் கணவன் – மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் ஏற்படும். அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதியும் மனச்சோர்வும் உண்டாகும். உங்களைப் பற்றித் தவறாகப் புரிந்துகொண்ட நண்பர்களும் உறவினர்களும், தங்கள் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்பார்கள். சக வியாபாரிகளால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் நீங்கும். விற்பனையும் இலாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும். பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் பொறுப்புகள் அதிகரிக்கவும், அதன் காரணமாக அசதி ஏற்படவும் கூடும்.
கடக ராசி அன்பர்களே!
எதிர்பார்த்ததைவிடவும் வருமானம் கூடுதலாகவே இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சிலருக்கு உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. அலுவலகத்தில் திருப்திகரமான போக்கே காணப்படும். வேறு வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். நல்ல வேலை கிடைக்கக்கூடும். பணியிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட இலாபம் அதிகமாக வரும் என்றாலும் அதற்காக மிகவும் உழைக்கவேண்டி இருக்கும். பணியாளர்களால் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். பெண்களுக்கு மனதுக்கு நிம்மதி உண்டாகும். கணவரிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.
சிம்ம ராசி அன்பர்களே!
எந்த விஷயத்திலும் நிதானம் தேவை. வருமானம் திருப்திகரமாக இருக்கும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடு நீங்கும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். உங்கள் வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டியது முக்கியம். பதவி உயர்வையோ ஊதிய உயர்வையோ தற்போது எதிர்பார்க்கமுடியாது. வியாபாரத்தில் எதிர்பார்க்கும் இலாபம் கிடைப்பதில் பிரச்சினை எதுவும் இருக்காது. நெருக்கடியான காலங்களில் வியாபாரத்தை எப்படியெல்லாம் பெருக்கலாம் என்ற சிந்தனை அதிகரிக்கும். பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம் இது. பணியில் இருக்கும் பெண்களுக்கு அலுவலகப் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியாதபடி வீட்டில் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
கன்னி ராசி அன்பர்களே!
பொருளாதார வசதிக்குக் குறைவில்லை. செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடு
வீர்கள். நெருங்கிய உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். அதனால், தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்த்துவிடலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களின் ஆலோசனைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். அதன் காரணமாக சில சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சக ஊழியர்களிடையே உங்கள் கௌரவம் உயரும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பொருட்களைக் கொள்முதல் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்கவும். பங்குதாரர்களின் ஆதரவு மனதுக்கு ஆறுதலாக இருக்கும். பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் உடல் அசதி உண்டாகும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் புகுந்த வீட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.
துலா ராசி அன்பர்களே!
பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். அநாவசிய செலவுகள் எதுவும் இருக்காது. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை. குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். அலுவலகத்தில் உற்சாகமாக உங்கள் பணிகளைச் செய்வீர்கள். ஒருசிலருக்கு இருக்கும் இடத்திலிருந்து வேறு ஊருக்கு மாறுதல் கிடைக்கும். அதிகாரிகள் சிலநேரங்களில் கண்டிப்பாகப் பேசினாலும் அனுசரணையாகவும் இருப்பார்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் சுமுகமான போக்கு ஏற்படும். பங்குதாரர்கள் உதவிக்கரமாக இருப்பார்கள். விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள். பெண்களுக்கு உற்சாகமான வாரமாக இருக்கும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள் தங்கள் பொறுப்புகளில் மிகுந்த கவனத்துடன் செயல்படவேண்டியது அவசியம்.
விருச்சிக ராசி அன்பர்களே!
வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதிகாரிகளிடம் பேசும்போது பதற்றம் வேண்டாம். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் சற்று கூடுதலாக உழைக்கவேண்டி வரும். பற்று வரவு சுமுகமாக நடக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்களுக்கு பிரச்சினை இல்லாத வாரம். கணவரின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். பணியில் இருக்கும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே!
குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக்காது. ஆனாலும், புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவுக்கு இலாபம் கிடைக்காது. போட்டிகளைச் சமாளிக்க கடுமையாகப் பாடுபட வேண்டி வரும். சக வியாபாரிகளால் மறைமுக இடையூறுகள் ஏற்படக்கூடும். பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். பணியில் இருக்கும் பெண்களுக்கு பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.
மகர ராசி அன்பர்களே!
சகோதர வகையில் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் கொஞ்சம் அனுசரித்துச் செல்வது அவசியம். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்பட்டு கையிருப்பைக் கரைக்கும். சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். பொருள்கள் களவுபோக வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருக்கும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு இப்போது முயற்சி செய்ய வேண்டாம். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட இலாபம் கூடுதலாகக் கிடைக்கும். பணியாளர்கள் விற்பனையை அதிகரிப்பதில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். சக வியாபாரிகள் அனுசரணை
யாக இருப்பார்கள். பெண்களுக்கு பொறுப்புகள் கூடுவதால் சோர்வு உண்டாகும். பணவரவு திருப்தி தரும். தகவல் தொழில்நுட்பத்துறையில் பணிசெய்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.
கும்ப ராசி அன்பர்களே!
நீங்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்துசேரும். பணவரவு அதிகரிக்கும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் ஏற்படும். குடும்ப விடயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். சிலருக்கு நீண்டநாட்களாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். உங்களுடைய சமயோசிதமான ஆலோசனை பெரிதும் பாராட்டப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். பணியாளர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். பெண்களுக்கு செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். பணி செய்யும் பெண்களுக்கு அலுவல கத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.
மீன ராசி அன்பர்களே!
எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூரில் இருக்கும் உறவினர்கள் மூலம் ஆதாயமும் ஏற்படும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதால் பொறுமை அவசியம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். உங்கள் கோரிக்கை நிர்வாகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் இன்னும் சில வாரங்கள் பொறுமையுடன் செயல்படவேண்டியது அவசியம். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பெண்கள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் பக்குவமாக நடந்துகொள்ளவும். புகுந்தவீட்டு உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும்.