இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கோப் குழு அழைப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி கோப் குழுவிற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்தார்.
அதேபோல் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, கோப் குழுவிற்கு அழைக்கப்படவுள்ள நிலையில் இதன்போது இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பிலான விசேட தணிக்கை அறிக்கை குறித்து கருத்திற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், கண்டி மாவட்டத்தின் மண்சரிவு அவதானம் காணப்படும் பிரதேசங்களில் வாழும் மக்களை மீள்குடியமர்த்தும் திட்டத்தின் முன்னேற்றம் குறித்து எதிர்வரும் 24 திகதி பரிசீலிக்கப்படும்.
இலங்கையில் பிளாஸ்டிக் இறக்குமதியை நிர்வகிப்பது மற்றும் நாட்டில் அவை பயன்படுத்துவது குறித்த சிறப்பு தணிக்கை அறிக்கை பெப்ரவரி 26 ஆம் திகதி பரிசீலிக்கப்படும் என்று குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் மேலும் தெரிவித்தார்.