இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவர் தெரிவு!
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான புதிய தலைவராக முன்னாள் செயலாளர் ஜஸ்வர் உமர் தெரிவாகியுள்ளார்.
புதிய தலைவர் உட்பட ஏனைய நிர்வாகத்தை தெரிவு செய்வதற்கான தேர்தலானது இன்று (30) மூன்று இடங்களில் நடைபெற்றது. ஒன்பது மாகாணங்கள் மூன்று வலயங்களாக பிரிக்கப்பட்டு காலி, கண்டி, பொலன்னறுவை ஆகிய மூன்று இடங்களில் இரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றிருந்தன.
இதில் 96 வாக்குகளை பெற்று கொண்ட ஜஸ்வர் உமர் புதிய தலைவராகத் தெரிவானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேர்னன் மணில் பெர்ணான்டோ 90 வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.