இலங்கை உயர்ஸ்தானிகரை சந்தித்த பாகிஸ்தானின் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள்
பாகிஸ்தானின் ஆளும் கட்சியான தெஹ்ரீக் ஈ இன்சாஃபின் சிரேஷ்ட உப தலைவர் அர்சாட் டாட் தலைமையிலான தூதுக்குழு, பாகிஸ்தானில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரை சந்தித்துள்ளது.
சியல்கொட்டில் இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக, தங்களது இரங்கலை நேரில் தெரிவிக்கும் வகையில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் மிகவும் வருந்தத்தக்கது என்றும், இதனால் முழு பாகிஸ்தானும் சோகத்திலும் வெட்கத்திலும் மூழ்கி இருப்பதாகவும் அங்கு அர்சாட் டாட் தெரிவித்தார்.
மேலும், இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.