இலங்கை அணிக்குள் நுழைந்த கொரோனா..!
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட்டுள்ள நுவான் துஷாரவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைத் தெரிவித்தது.
மேலும், இலங்கை கிரிக்கட் அணியின் உடற்பயிற்சியாளர் டில்ஷான் பொன்சோகாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.