இலங்கையர்கள் ஒவ்வொருவரும் செலுத்தவேண்டிய கடன் தொகை எவ்வளவு தெரியுமா?
தற்போதைய சூழ்நிலையில் இலங்கையர் ஒருவரின் தனிநபர் கடன் சுமார் 800, 000 ரூபாவாக அதிகரித்துள்ளது என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபாவின் தொடர்ச்சியான வீழ்ச்சி மற்றும் டொலரின் விலை அதகிரிப்பு என்பவற்றை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை தற்போதைய நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் அமரவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.