இன்றைய ராசி பலன் (27.12.2021)
27.12.2021 திங்கள் – மார்கழி 12
நட்சத்திரம்: அத்தம்
அ.கா 5.26 – 28.12.2021
அதிகாலை 5.08 வரை
யோகம்: ஸெளபாக்யம்
காலை 8.54 வரை
சோபனம்
காலை 8.54 – 28.12.2021
காலை 6.52 வரை
திதி: அமர பட்ச அஷ்டமி
இரவு 7.28 வரை
அமர பட்ச நவமி
இரவு 7.28 – 28.12.2021
மாலை 6.09 வரை
முற்கரணம்: பாலவம்
காலை 7.53 வரை
பிற்கரணம்: கெளலவம்
காலை 7.53 – இரவு 7.28
சுப நேரங்கள்
காலை 6.20 – 7.47
மாலை 4.36 – 6.03
அசுப நேரங்கள்
ராகு காலம்
காலை 7.48 – 9.16
குளிகை காலம்
பிற்பகல் 1.40 – 3.08
எமகண்ட காலம்
காலை 10.44 – பி.ப 12.12
துர் முகூர்த்தம்
பிற்பகல் 12.35 – 1.22
பிற்பகல் 2.56 – 3.43
லோகநாயகி ஸஹஷ்ர சீர்ஷ வதனா அன்னை பிரத்யங்கிராவின் கருணையாலே நற்பவி நற்பவி நற்பவி
மேஷம்:
வேலைத்தளத்தில் பணி நிலை உறுதியாக இருப்பதுடன், சில மாற்றங்களில் ஆர்வம் உண்டாகலாம். வர வேண்டிய பண வரவுகள் கிடைக்கலாம்.
வாழ்க்கைத்துணையுடன் உறவு வலுப்படும்.
ரிஷபம்:
வணிகத்தில் நல்ல பலன்கள் கிடைக்கலாம். பணிக்கான பயணம் ஏற்படலாம். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளுடன் இன்றைய நாள்
இனிமையாக இருக்கும்.
மிதுனம்:
உணவகங்கள் சம்பந்தப்பட்ட தொழிலில் நல்ல நாளாக அமையலாம்.
அன்னையின் உடல்நலத்தில் சிறிய கவனம் தேவைப்படலாம். வணிகத்தில் பிறரின் தலையீட்டை தவிர்ப்பது நல்லது. தம்பதியரிடையே ஒற்றுமை மேலோங்கலாம்.
கடகம்:
சகோதரர்களுடன் உங்கள் உறவு நல்ல நிலை பெறும். காதல்
உறவில் இனிமை அதிகரிக்கலாம். குடும்பத்தில் சுப மங்கள நிகழ்வுகள் உண்டாகலாம். நம்பிக்கை மேம்படும். பணிகளில் பதவி உயர்வு கிடைக்கலாம்.
சிம்மம்:
திருமணத்திற்கு காத்திருப்போருக்கு திருமண நாள் உறுதி செய்யப்படலாம். பணிகளில் சிறிய பதவியில் இருப்பவர்களுக்கு நல்ல நிலை உருவாகலாம். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் சிறிய கவனம் தேவைப்படலாம். பணிச்சுமை அதிகரிக்கலாம்.
கன்னி:
நண்பர்களுடனான உறவின் நிலை மகிழ்ச்சி தரும். மாணவர்களுக்கு கற்பதில் அதிக பலன் கிடைக்கலாம். அறிவார்ந்தவர்களின் நட்பு நல்ல பயனளிக்கும். கொள்கைகளில் சமரசம் தவிர்க்க வேண்டாம். உடல்நலம் மேம்படும்.
துலாம்:
வாகனம் செலுத்துவதில் சிறிய கவனம் தேவைப்படலாம். எதிர்மறை சிந்தனைகளை நீக்குவது நன்மை.வேலைகளில் சிறிய விமர்சனம் உண்டாகலாம். பணிகளில் அவசியமற்ற அவசரம் தவிர்ப்பது நல்லது.
விருச்சிகம்:
சுப செய்திகள் கிடைக்கக்கூடும். பணிகளில் செயல்திறன் சிறப்புறுவதுடன்,
மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்க பெறலாம். உங்களுக்கான சில சட்ட
தடைகளும் நீங்கலாம். தம்பதியரிடையே இனிமை பெருகும்.
தனுசு:
பங்குதாரர்கள் சம்பந்தப்பட்ட தொழிலில் லாபங்கள் அதிகரிக்கலாம். சமூக
கெளரவம் மேம்படும். தொழில் முன்னேற்றத்திற்கான சந்தர்ப்பங்கள் கிடைக்கலாம். புதிய தொழில் திட்டங்களில் நிதி ஒதுக்கீடுகள் செய்யலாம்.
மகரம்:
நினைத்த நல்ல செயல் தாமதமின்றி நிறைவேறலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கலாம். பிறரின் மீதான நம்பிக்கை விடயத்தில் சிறிய கவனம் தேவைப்படலாம். உங்கள் அறிவுரைகள் சிலருக்கு பயனளிக்கலாம்.
கும்பம்:
வணிகத்தில் சில பிரச்சினைகள் உண்டாகலாம். கடனாக கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதில்சிறிய பிரச்சினைகள் உண்டாகலாம். உங்கள் மதிப்பிற்கு சிறிய பங்கம் உண்டாகலாம். வயிறு சம்பந்தப்பட்ட சிறிய பிரச்சினைகள் உண்டாகலாம். உணர்வு பூர்வமான முடிவுகளை தவிர்ப்பது நன்மை.
சந்திராஷ்டமம்:
சதயம் நட்சத்திரத்திற்கு
இரவு 11.16 வரை
பூரட்டாதி நட்சத்திரம்
பாதம் 1/2/3க்கு
இரவு 11.16 – 28.12.2021
மாலை 4.44 வரை
மீனம்:
உங்கள் சுயமரியாதை மேம்படும். வருவாய்க்கான புதிய நல்ல நிலை தோன்றலாம். அன்றாட வழக்கங்கள் ஒழுங்கு பெறும். குடும்பத்தினருடன்
இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையலாம்.