இன்றைய ராசி பலன் (23.12.2021)
23.12.2021 வியாழன் மார்கழி 8
நட்சத்திரம்: ஆயிலியம்
அ.கா 12.45 – 24.12.2021
அதிகாலை 2.42 வரை
யோகம்: வைதிருதி
பிற்பகல் 12.12 வரை
விஷ்கம்பம்
பி.ப 12.12 – 24.12.2021
பிற்பகல் 12.01 வரை
திதி: அமர பட்ச சதுர்த்தி
மாலை 6.27 வரை
அமர பட்ச பஞ்சமி
மாலை 6.27 – 24.12.2021
இரவு 7.34 வரை
முற்கரணம்: பாலவம்
அ.கா 5.42 – மாலை 6.27
பிற்கரணம்: கெளலவம்
மாலை 6.27 – 24.12.2021
காலை 7.04 வரை
சுப நேரங்கள்
காலை 11.00 – பி.ப 12.10
அசுப நேரங்கள்
ராகு காலம்
பிற்பகல் 1.38 – 3.06
குளிகை காலம்
காலை 9.14 – 10.42
எமகண்ட காலம்
காலை 6.18 – 7.46
துர் முகூர்த்தம்
காலை 10.13 – 10.59
பிற்பகல் 2.54 – 3.41
லோகநாயகி ஸஹஷ்ர சீர்ஷ வதனா அன்னை பிரத்யங்கிராவின் கருணையாலே நற்பவி நற்பவி நற்பவி
ராசிகளுக்கான இன்றைய பொது பலன்கள்
மேஷம்:
சட்டம் சம்பந்தப்பட்ட விடயங்களில் சாதகமான நிலை உண்டாகலாம். புதிய
நட்புகள் கிடைக்க பெறலாம். காணி/வீடு சொத்து சம்பந்தப்பட்ட தொழில் லாபங்கள் அதிகரிக்கும். வேலைகளில் உயர்பதவியில் இருப்பவர்களின் உறவு
நல்ல நிலை பெறுவதோடு, சூழ்நிலையும் மகிழ்ச்சி தரலாம்.
ரிஷபம்:
பணிக்கான பயண திட்டம் ஏற்படலாம். நிதி குறைவால் சில வேலைகள் தடைப்படலாம். பிள்ளைகளின் செயல்களில் மகிழ்ச்சி உண்டாகலாம். எதிர்மறை எண்ணங்களை நீக்குவதாலும், அனுபவசாலிகளின் ஆலோசனை பெறுவதாலும் நன்மை கிடைக்கலாம்.
மிதுனம்:
வணிக பொருளாதார லாபங்கள் மேம்படும். உணர்வுகளை வாழ்க்கைத்துணையுடன் பகிர்வதால் மன அமைதி கிடைக்கலாம். மூட்டு வலி பிரச்சினை சிறிய அளவில் உண்டாகலாம். இல்லத்தின் சூழலும் இனிமை தரலாம்.
கடகம்:
பணிகளில் பதவி உயர்வு நிலை உருவாகலாம். சமூக மதிப்பு மேம்படும்.
அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளில் பிரச்சினைகள் நீங்கலாம். வெளிநாட்டில் வாழும் நண்பர்களின் சந்திப்புஉண்டாகலாம்.
சிம்மம்:
பங்குச்சந்தை நிதி ஒதுக்கீடுகளில் கவனம் தேவைப்படலாம். வேலைத்தளங்களில் சிறிய பதற்றம் ஏற்படலாம். காதல் உறவில் சொற்களில் கவனமாக இருப்பது நல்லது. அதிகாரங்களை பயன்படுத்திவதிலும் கவனம் தேவைப்படலாம்.
கன்னி:
காதல் முன்மொழிதலுக்கு சாதகமான, இனிமையான நாளாக அமையலாம். உடல்நலம் மேம்படும். அறிவுபூர்வமான விவாதங்களில் கலந்து கொள்ளும் நிலை உண்டாகலாம். நண்பர்களுடன் இன்றைய நாள் மகிழ்ச்சியாக அமையலாம்.
துலாம்:
திருமணத்திற்கு காத்திருப்போருக்கு திருமண சுப அறிகுறி தோன்றலாம். அரசியலில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். வேலைகளில் நடைமுறை மேம்படும்.
ஜாதக கிரக யோகத்தால் நல்ல நிலை உருவாகலாம்.
காதலர்களுக்கு இனிமையான நாளாக அமையலாம்.
விருச்சிகம்:
இன்று வணிகத்தில் புதிய மாற்றங்களை செய்ய உகந்த நாள் இல்லை.
வீட்டு பாவனை பொருட்களின் கொள்வனவு ஏற்படலாம். வருவாய் நல்ல நிலை பெறலாம். சாதனைகளால் பெருமை அடையலாம்.
தனுசு:
வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படாமல் கவனமாக இருப்பது நன்மை. கழுத்து வலி சிறிய அளவில் உண்டாகலாம்.அதீத நம்பிக்கையை
தவிர்ப்பது நல்லது. உடல்நலத்திலும் கவனம் தேவைப்படலாம்.உங்களின் சில செயல்கள் நண்பர்களுக்கு கவலையை தரலாம்.
சந்திராஷ்டமம்:
பூராடம் நட்சத்திரத்திற்கு
இரவு 8.15 வரை
உத்தராடம் நட்சத்திரம்
பாதம் 1க்கு இரவு 8.15-
24.12.2021 அ.கா 2.42
மகரம்:
வெளிநாட்டு பயணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கப் பெறலாம். வணிக ஆய்வு முயற்சிகள் உண்டாகலாம். அவசரமற்ற முடிவுகள் மட்டுமே தவறான
பலன்களை தராமல் இருக்கலாம். வருவாய் அதிகரிக்கலாம். வாழ்க்கைத்துணையுடன் செல்லும் இனிமையான பயண தீர்மானம் எடுக்கபடலாம்.
கும்பம்:
மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கலாம். பணிகளில் செல்வாக்கு மேம்படலாம். தரகு சம்பந்தப்பட்ட வேலைகளில் வருவாய் அதிகரிக்கலாம். வயிறு
சம்பந்தப்பட்ட உடல்நலத்தில் சிறிய பிரச்சினை தோன்றலாம். சில உறவுகளின் செயல்களில் கவலை ஏற்படலாம்.
மீனம்:
அறிவார்ந்த நண்பர்களின் உறவுகள் சிறப்புறும். வேலைத்தள பணிகள் தாமதமின்றி நிறைவேறும். பண இருப்பு நல்ல நிலை பெறுவதால், சில கடன்களை திரும்ப செலுத்தும் நன்மை உண்டாகலாம்.