இன்றைய ராசி பலன் (04.03.2022)
நட்சத்திரம்: பூசம்
இரவு 10.08 வரை
ஆயிலியம்
இரவு 10.08 – 15.03.2022
இரவு 11.33 வரை
யோகம்: அதிண்டம்
அ.கா 4.18 – 15.03.2022
அதிகாலை 4.15 வரை
திதி: பூர்வ பட்ச ஏகாதசி
பிற்பகல் 12.05 வரை
பூர்வ பட்ச துவாதசி
பி.ப 12.05 – 15.03.2022
பிற்பகல் 1.12 வரை
முற்கரணம்: பத்திரை
பிற்பகல் 12.05 வரை
பிற்கரணம்: பவம்
பி.ப 12.05 – 15.03.2022
அதிகாலை 12.43 வரை
சுப நேரங்கள்
காலை 6.18 – 7.18
மாலை 4.51 – 6.22
அசுப நேரங்கள்
ராகு காலம்
காலை 7.48 – 9.19
குளிகை காலம்
பிற்பகல் 1.50 – 3.21
எமகண்ட காலம்
காலை 10.49 – பி.ப 12.20
துர் முகூர்த்தம்
பிற்பகல் 12.44 – 1.32
மாலை 3.09 – 3.57
லோகநாயகி ஸஹஷ்ர சீர்ஷ வதனா அன்னை பிரத்யங்கிராவின் கருணையாலே நற்பவி நற்பவி நற்பவி
மேஷம்: வணிகத்தில் புதிய திட்டங்களை தவிர்ப்பது நல்லது.
தம்பதியரிடையே சிறிய பிரச்சினைகள் உண்டாகலாம். உங்கள் மீதான இரகசிய எதிர்ப்புகளால் தீங்கு முயற்சி உண்டாகலாம்.
இறைவணக்கம் தேவை.
ரிஷபம்: வேலைத்தளத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவு உண்டாகலாம். பணிக்கான நேர்முகத் தேர்வுகள் பயனளிக்கும். நிதி நிலைமை சீராகும். புதிய தொழில் அல்லது வேலை தொடங்குவதற்கு இன்று சாதகமான நாள்.
மிதுனம்: கடன்களை திரும்ப செலுத்த நல்ல நாள். செலவுகள் அதிகரிக்கலாம். பயணத்தில் சிறிய கவனம் தேவைப்படலாம். குடும்பத்தில் சில பிரச்சினைகள் உண்டாகலாம்.
கடகம்: சிலருக்கு நட்பு காதலாக மாற்றம் பெறலாம். சமூக தொண்டுகளில் மன அமைதி கிடைக்கலாம். நிதி நிலைமை சீராகும்.பண விடயங்களில் கவனம் தேவைப்படலாம். சுப செய்திகளும் கிடைக்கலாம்.
சிம்மம்: உடல்நலத்தில் சிறிய பலவீனம் உணரப்படலாம். நிதி
சிக்கல் மன கவலை தரலாம். சட்டத்துக்கு புறம்பான விடயங்களில் ஒதுங்கியிருப்பது நன்மை. பழைய கடன் பிரச்சினைகள் ஏற்படலாம்.
கன்னி: பிள்ளைகளின் தொழில் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கலாம். வணிகத்தில் புதிய முடிவுகள் எடுக்கப்படலாம். தொழில்நுட்ப கல்வி பயிலும் மாணவர்களுக்கு எதிர்கால தொழில் வாய்ப்புகள் உருவாகலாம். காதலர்களுக்கு இனிமையான நாளாக அமையலாம்.
துலாம்: சிறிய முதலீட்டில் செய்யும் வியாபாரத்தில் வருவாய் அதிகரிக்கலாம். புதிய நிதி முதலீட்டில் அதிக கவனம் தேவைப்படலாம். உங்கள் ஆலோசனைகள் அதிக முக்கியத்துவம் பெறலாம். அரசாங்க சம்பந்தப்பட்ட வேலைகளில் இருந்த சில தடைகள் நீங்கலாம்.
விருச்சிகம்: எழுத்தாளர்களுக்கு கௌரவம் கிடைக்கப் பெறலாம். பணியிடங்களில் பணிச்சுமை அதிகரிக்கலாம். நண்பர்களுடன் இன்று மகிழ்வான நாளாக அமையலாம். தொழிலில் தன்னம்பிக்கை மேம்படும்.
தனுசு: வணிகத்தில் ஒன்றிணைந்து பணியாற்றுபவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு தருவது நன்மை. இன்று புதிய தொழில் தொடங்க சாதகமான நாளாக இல்லை. பணியிடங்களில் வேலைகளை கெடுக்கும் சிலர் சொல்லும் விடயங்களை தவிர்ப்பது நல்லது. முழங்கால் வலி சிறிய அளவில் ஏற்படலாம். இறைவணக்கம் தேவை.
சந்திராஷ்டமம்: மூலம் நட்சத்திரத்துக்கு, மாலை 3.41 வரை
பூராடம் நட்சத்திரத்துக்கு, மாலை 3.41 – 15.03.2022
மாலை 5.15 வரை
மகரம்: வர வேண்டிய பண வரவுகள் கிடைக்கலாம். வணிகத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதோடு, வணிக உறவுகளும் வலுப்படும். பணியிடங்களில் வருவாய் அதிகரிக்கலாம். புதிய கூட்டுதொழில் முயற்சிகளை இன்று தவிர்ப்பது நல்லது.
கும்பம்: வேலைத்தளத்தில் மேலதிக பொறுப்பு கிடைக்கலாம். உடல்நலத்தில் சளி சம்பந்தப்பட்ட சிறிய பிரச்சினைகள் உண்டாகலாம். வாகனம் செலுத்துவதில் சிறிய கவனம் தேவைப்படலாம். புதிய முயற்சிக்கான விருப்பம் ஏற்படலாம்.
உறவுகளுடன் நல்லிணக்கத்தை மேம்படுத்த நல்ல நாள்.
மீனம்: பிள்ளைகளின் பிடிவாதம் மனக்கவலை தரலாம். வீட்டை தவிர்ந்த வெளி உணவு விடயங்களில் சிறிய கவனம் தேவைப்படலாம். எதிர்பாராத பயணங்கள் உண்டாகலாம். காதலர்களுக்கு இடையே அனுசரிப்பு தேவைப்படலாம். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் நீங்கலாம்.