இன்றைய இராசி பலன்- 22.03.2022
மேஷம்
மேஷம் பொதுப்பலன்கள்:
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். உங்கள் இலக்குகளை நீங்கள் அடைவீர்கள்.
மேஷம் வேலை / தொழில்:
இன்று உங்களின் பெரும்பான்மையான ஆற்றலைப் பயன்படுத்துவீர்கள். அது உங்கள் பணியில் பிரதிபலிக்கும். உங்களின் தனித் திறமைகளை நிரூபிப்பீர்கள்.
மேஷம் காதல் / திருமணம்:
உங்கள் துணையிடம் நேர்மையாக அதே சமயம் நகைச்சுவை உணர்வுடன் நடந்து கொள்வீர்கள். இதனால் இருவரிடையே புரிந்துணர்வும் நல்லிணக்கமும் அதிகரிக்கும்.
மேஷம் பணம் / நிதிநிலைமை:
இன்று நிதிநிலைமை சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பு ஆற்றலும் அதிகரிக்கும்.
மேஷம் ஆரோக்கியம்:
உங்களின் உற்சாகமான மனநிலை காரணமாக இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ரிஷபம் பொதுப்பலன்கள்:
இன்றைய நாள் அனுகூலம் குறைந்து காணப்படும். வெற்றியைப் பெற பொறுமை அவசியம். நீங்கள் சில தடைகளை சந்திக்க நேரலாம். எனவே திட்டமிட்டு செயலாற்ற வேண்டும்.
ரிஷபம் வேலை / தொழில்:
இன்று அதிர்ஷ்டம் குறைந்து காணப்படும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் பலன் இருக்காது. உங்கள் பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ரிஷபம் காதல் / திருமணம்:
உங்கள் துணையுடனான உறவு குறித்து பெரியவர்கள் ஆலோசனை வழங்கினாலும் நீங்கள் கேட்கும் மனநிலையில் இருக்க மாட்டீர்கள். இதனால் உங்கள் இருவருக்கும் இடையில் மோதல்கள் ஏற்படும்.
ரிஷபம் பணம் / நிதிநிலைமை:
இன்று பயணத்தின் போது பண இழப்பிற்கான வாய்ப்பு உள்ளது. நீங்கள் பணத்தை கவனமுடன் கையாளவும்.
ரிஷபம் ஆரோக்கியம்:
கண்களில் ஏற்படும் கோளாறும் முதுகுவலியும் உங்களை பாதிக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம் பொதுப்பலன்கள்:
இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள் அல்ல. தேவையற்ற விஷயங்களுக்கு பதட்டமடைவீர்கள் அதனை தவிர்த்து உற்சாகமாக இருக்க வேண்டியது அவசியம்.
மிதுனம் வேலை / தொழில்:
பணியில் நல்ல பெயர் எடுப்பதற்கான சாத்தியம் இல்லை. இதனால் உங்களுக்கு வருத்தம் ஏற்படும். உங்கள் சகபணியாளர்களை நண்பர்கள் போல கருதிப் பழக வேண்டும்.
மிதுனம் காதல் / திருமணம்:
உறவில் நல்லிணக்கம் குறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் சுமூக உறவு கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அப்பொழுதுதான் நல்ல புரிந்துணர்வு காணப்படும்.
மிதுனம் பணம் / நிதிநிலைமை:
சம்பாதித்த பணத்தை இன்று குடும்பத்திற்காக செலவு செய்வீர்கள். பணத்தை அதிகமாக சம்பாதிப்பதற்கும் சேமிப்பதற்கும் வாய்ப்பு குறைவு.
மிதுனம் ஆரோக்கியம்:
இன்று சூடு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக நீரைப் பருகுவது நல்லது.
கடகம் பொதுப்பலன்கள்:
இன்று வெற்றிகரமான நாளாக அமையும். உங்களிடம் காணப்படும் மகிழ்ச்சி காரணமாக பணிகளை எளிதாக முடிப்பீர்கள். உங்களிடம் அதிக ஆற்றல் மற்றும் விழிப்புணர்வு காணப்படும்.அவை உங்களின் வெற்றிக்கு வழி வகுக்கும்.
கடகம் வேலை / தொழில்:
உங்கள் பணியில் உங்களுக்கு திருப்தி கிடைக்கும். பணிகளை தன்னிச்சையாக செய்து முடிப்பீர்கள்.
கடகம் காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் நல்ல புரிந்துணர்வு ஏற்படும்.
கடகம் பணம் / நிதிநிலைமை:
இன்று அதிக அளவில் பணம் காணப்படும். உங்கள் வங்கியிருப்பு சிறப்பாக இருக்கும்.
கடகம் ஆரோக்கியம்:
இன்று ஆரோக்கியத்தை சிறப்பாக பாரமரிப்பீர்கள். உங்களிடம் காணப்படும் தைரியம் மற்றும் உறுதி காரணமாக திடமாக இருப்பீர்கள்.
சிம்மம்
பொதுப்பலன்கள்:
இன்று மன உளைச்சல் காணப்படும். பாடல்கள் கேட்பது அல்லது திரைப்படங்கள் பார்ப்பது போன்ற நிகழ்சிகள் மூலம் மனதில் மகிழ்ச்சி ஏற்படுத்திக் கொள்ளலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை இன்று தவிர்க்கவும்.
வேலை / தொழில்:
இன்று பணிகள் மலை போல் குவிந்து கொண்டே இருக்கும். இதனால் கொடுக்கப்பட்ட பணிகளை முடிப்பதில் தாமதங்கள் காணப்படும்.
காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். இது உறவின் நல்லிணக்கத்தை பாதிக்கும்.
பணம் / நிதிநிலைமை:
இன்று தேவையற்ற செலவுகள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். அதிக பணம் சேர்ப்பதற்கு குறைந்த வாய்ப்புகளே காணப்படும்.
ஆரோக்கியம்:
ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் காணப்படாது. என்றாலும் உங்கள் உடன் பிறப்புகளின் நலனுக்காக பணம் செலவு செய்ய வேண்டி நேரும்.
கன்னி
பொதுப்பலன்கள்:
இன்று நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். முக்கிய முடிவுகள் நல்ல பலன்களை அளிக்கும். சிறிய முயற்சிகள் கூட இன்று வெற்றியை அளிக்கும்.
வேலை / தொழில்:
நீங்கள் செய்யும் பணியில் சிறப்பான வளர்ச்சி பெறுவீர்கள். உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
கன்னி காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். இதனால் அவரை நன்கு புரிந்து கொள்ள முடியும்.
கன்னி பணம் / நிதிநிலைமை:
இன்று பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. இதனால் உங்கள் வருமானம் உயரும்.
கன்னி ஆரோக்கியம்:
இன்று உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.இன்று உங்களிடம் ஆற்றல் நிறைந்திருக்கும்.
துலாம்
துலாம் பொதுப்பலன்கள்:
கூடுதல் பொறுப்புகள் காரணமாக இன்று உங்கள் செயல்களை செய்வது கடினமாக உணர்வீர்கள். இன்று அமைதியின்மை காணப்படும். நேர்மறை எண்ணம் மூலம் இன்றைய நாளை உங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ளலாம்.
துலாம் வேலை / தொழில்:
இன்று பணிச்சுமைகள் அதிகமாக காணப்படும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புகள் காணப்படும்.
துலாம் காதல் / திருமணம்:
கருத்து வேறுபாடு காரணமாக துணையுடன் மோதல்கள் காணப்படும். இருவரும் மகிழ்ச்சியாக இருக்க இந்த வேறுபாடுகளை களைவது சிறந்தது. புத பகவான் உறவின் நல்லிணக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார்.
துலாம் பணம் / நிதிநிலைமை:
இன்று அதிக பொறுப்புகள் காரணமாக செலவுகள் அதிகமாக காணப்படும்.
துலாம் ஆரோக்கியம்:
இன்று ஆரோக்கியம் சுமாராக இருக்கும். தொண்டை சம்பந்தமான பாதிப்புகள் காணப்படும்.
விருச்சிகம்
விருச்சிகம் பொதுப்பலன்கள்:
இன்று உங்கள் வளர்ச்சியில் சில தடைகள் காணப்படும். என்றாலும் உறுதியும் ஈடுபாடும் தடைகளை வெற்றிப் படிகளாக்கும்.
விருச்சிகம் வேலை / தொழில்:
பணி நிமித்தமான பயணம் காணப்படும். இந்தப் பயணம் உங்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக அமையாது. விரும்பத்தாகத தருணங்களை சந்திக்க நேரும்.
விருச்சிகம் காதல் / திருமணம்:
உங்கள் துணையுடம் அமைதியாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மகிழ்ச்சியை பராமரிக்க உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
விருச்சிகம் பணம் / நிதிநிலைமை:
இன்று வரவும் செலவும் இணைந்து காணப்படும். எனவே சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு மகிழ்ச்சி அடையும் நிலை காணப்படாது.
விருச்சிகம் ஆரோக்கியம்:
இன்று பதட்டம் காணப்படும். நீங்கள் அதிகப்படியாக வருத்திக் கொள்ள வேண்டாம்.
தனுசு
தனுசு பொதுப்பலன்கள்:
இன்றைய நாளில் அனுகூலம் சற்று குறைந்து காணப்படும். நீங்கள் எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ள வேண்டும். இன்று எதையோ இழந்தது போல உணர்வீர்கள்.
தனுசு வேலை / தொழில்:
பணிகளைப் பொறுத்த வரை இன்று சற்று கடினமாக காணப்படும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு குறைந்து காணப்படும்.
தனுசு காதல் / திருமணம்:
நகைச்சுவை அணுகுமுறை காரணமாக உங்கள் துணையுடன் நல்லுறவை பராமரிப்பீர்கள்.
தனுசு பணம் / நிதிநிலைமை:
இன்று பணத்தை கடனாக வாங்குவீர்கள். அதன் மூலம் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
தனுசு ஆரோக்கியம்:
உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உங்களிடம் காணப்படும் உறுதி மற்றும் தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.
மகரம்
மகரம் பொதுப்பலன்கள்:
இன்று எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். அது உங்களுக்கு திருப்தி அளிக்கும். விருந்தினர் வரகை உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். இதனால் மகிழ்ச்சி யாக இருப்பீர்கள்.
மகரம் வேலை / தொழில்:
பணியிடத்தில் உற்சாகமான வாய்ப்புகள் காத்திருக்கும். பணியிடச் சூழல் இனிமையாக இருக்கும். இன்று மகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள்.
மகரம் காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் நேர்மையாக நடந்துகொள்வீர்கள். உங்கள் அன்பை நிரூபித்துக் காட்டுவீர்கள்.
மகரம் பணம் / நிதிநிலைமை:
இன்று நிதிநிலைமை சிறப்பாக வளர்ச்சி பெரும். இன்று உங்களின் கடின உழைப்பிற்காக ஊக்கத் தொகை அல்லது சலுகைகள் வகையில் பணவரவு காணப்படும்.
மகரம் ஆரோக்கியம்:
ஆரோக்கியம் சிறப்பாக காணப்படும் இன்று நீங்கள் தேக ஆரோக்கியத்தை பராமரிப்பீர்கள்.
கும்பம்
கும்பம் பொதுப்பலன்கள்:
இன்று அமைதியுடன் இருக்க நீங்கள் தைரியம் மற்றும் உறுதியுடன் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள நீங்கள் நேர்மறை எண்ணத்துடன் இருக்க வேண்டும்.
கும்பம் வேலை / தொழில்:
அதிகமான பணிகள் காரணமாக இன்று நீங்கள் ஓய்வின்றி வேலை செய்வீர்கள். பணியில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. இது உங்களுக்கு கவலையை உண்டாக்கும்.
கும்பம் காதல் / திருமணம்:
உங்கள் துணையுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். உங்களின் மன நிலை தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதால் மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கும்பம் பணம் / நிதிநிலைமை:
இன்று பண இழப்பிற்கான வாய்ப்புகள் உள்ளது. வீண் விரயங்கள் காணப்படும். உங்கள் நிதிநிலையில் கட்டுப்பாட்டை பராமரிக்க வேண்டும்.
கும்பம் ஆரோக்கியம்:
இன்று சளி ஏற்பட வாய்ப்பு உள்ளது.வெந்நீர் அதிகமாகப் பருக வேண்டும். குளிர்ச்சியான உணவுகளை தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீனம் பொதுப்பலன்கள்:
நீங்கள் அறிவுபூர்வமாக செயலாற்றுவதன் மூலம் இன்று எழும் பிரச்சினகளைக் கையாள இயலும்.இன்றைய நாள் சாதகமாக்கிக் கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.
மீனம் வேலை / தொழில்:
சிறப்பாக பணியாற்றுவதற்கு இன்றைய நாள் அனுகூலமாக இருக்காது. பணிகள் அதிகமாக இருக்கும் என்பதால் முறையாக திட்டமிடுவது அவசியம்.
மீனம் காதல் / திருமணம்:
நீங்கள் சிறிய விஷயத்தை கூட பெரிய அளவில் காண்பீர்கள். அதனை உங்கள் துணையிடம் வெளிப்படுத்துவீர்கள். மகிழ்ச்சியான போக்கு சிறந்தது.
மீனம் பணம் / நிதிநிலைமை:
இன்று பணப்பற்றாக்குறை காணப்படும். பொறுப்புகள் அதிகமாக காணப்படுவதால் கையில் பணம் குறைவாக காணப்படும்.
மீனம் ஆரோக்கியம்:
ஒவ்வாமை காரணமாக சளி இருமல் போன்ற தொல்லைகள் காணப்படும். குளிர்ச்சியான உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது.