இன்று உயிரிழந்த தெஹிவளை வாசியின் இறுதி நிகழ்வுகள் காலையில் !
கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு இன்று உயிரிழந்த தெஹிவளை வாசியின் உடல் நாளை காலைக்குள் தகனம் செய்யப்படுமென வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
இறந்தவரின் அடையாளம் குறித்து ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. அதனை உறுதிப்படுத்த நாம் முயன்றபோது -இறந்தவர் தெஹிவளை பகுதியை சிங்களவர் என்று வைத்தியசாலை தகவல்கள் மேலும் குறிப்பிட்டன .கப்பல் வர்த்தக நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றியதாக சொல்லப்பட்டது.
குடும்பத்தினர் அவரின் உடலை தூர இருந்து பார்வையிட்ட பின்னர் உடல் தகனம் செய்யப்படும்.
இந்த மரணத்தையடுத்து தெஹிவளை பகுதியில் சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் இரட்டிப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளன.