இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு
இந்தோனேசியாவின் மாலுகு தீவுகள் பகுதியில் இன்று (16) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு தீவுகள் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 10.13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.
10 கிலோமீற்றர் ஆழத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதே பகுதியில் கடந்த ஜூன் 3ஆம் திகதி 6-0 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நிலநடுக்க பாதிப்பால் மாலுகு தீவுகள் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கடற்கரைப் பகுதியில் வாழும் மக்கள் அங்கிருந்து வெளியேறி உயரமான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.