இந்திய காங்கிரஸ் முக்கிய கூட்டத்தில் ராகுலும் சோனியாவும் இல்லை
கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதவி விலகியதால் ஏற்பட்ட தலைமை நெருக்கடி குறித்து விவாதிக்க இந்திய காங்கிரஸ் தலைவர்கள் கூடி வருகின்றனர்.
கட்சியின் புதிய தலைவராக சுஷில்குமார் ஷிண்டே மற்றும் மல்லிகார்ஜூன் கார்கே ஆகயோருள் ஒருவரை காங்கிரஸ் தேர்வு செய்யலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் நடைபெறும் இந்த சந்திப்புக்கு ஆனந்த் சர்மா, அகமது படேல், குலாம் நபி ஆசாத், பி சிதம்பரம், தீபந்தர் ஹூடா, ஜோதிராதித்யா சிந்தியா போன்ற மூத்த தலைவர்கள் வந்துள்ளனர்.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை.
அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரி பிரியங்கா காந்தி வாத்ரா ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணியில் எந்தப் பங்கையும் விரும்பவில்லை என்று ராகுல் கட்சியிடம் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கபடுகிறது.