இந்தியாவுக்கு எதிரான T20 தொடர்: மே.இந்திய தீவுகள் அணி அறிவிப்பு
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 3 T20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.
தென்னாபிரிக்க தொடர் ஏமாற்றத்துடன் முடிவடைந்த நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சொந்த மண்ணில் நடைபெறும் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் விபரம்:-
பொல்லார்ட் (தலைவர்), நிக்கோலஸ் பூரன் (உப தலைவர்), ஃபேபியன் ஆலன், டெரன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஷெல்டன் காட்ரெல், டொமினிக் டிரேக்ஸ், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகேல் ஹோசின், பிராண்டன் கிங், ரோவ்மேன் பவல், ரொமாரியோ ஷெப்பர்ட், ஒடியன் ஸ்மித், கைல் மேயர்ஸ், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.