இந்தியாவில் மூகாம்பிகையை வழிபட்டார் ரணில் !
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கு முன்னோடியாக கடவுள் அனுக்கிரகம் பெற இந்திய கர்நாடக மாநில உடுப்பி மாவட்டத்திலுள்ள கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் துணைவியாருடன் இன்று தரிசனம் செய்தார்.
சீரற்ற வானிலை காரணமாக ஹெலிகொப்டரில் செல்லாமல் தரைவழியே பிரதமரை அழைத்துச் சென்றனர் பாதுகாப்பு அதிகாரிகள்.