இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளர் காலமானார்
இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளரான சந்திரா நாயுடு தமது 88 வயதில் காலமானார்.
உலக கிரிக்கெட்டில் இந்திய அணியை இடம்பெற செய்தவர்களில் முக்கியத்துவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் சி.கே. நாயுடு.
இவரது இளைய மகளான 88 வயதுடைய சந்திரா நாயுடு இந்தியாவின் முதல் பெண் கிரிக்கெட் வர்ணனையாளராவார்.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வசித்து வந்த இவர் சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் காலமானார். இந்த தகவலை சந்திராநாயுடுவின் சகோதரியின் மகன் விஜய் நாயுடு உறுதி செய்துள்ளார்.
அவர் கடந்த சில ஆண்டுகளாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்களின் நிகழ்வுகளில் பங்குபற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது மறைவுக்கு கிரிக்கட் முக்கியஸ்த்தர்கள் பலரும் தங்களது இரங்கலை வெளியிட்டு வருகின்றனர்.