ஆஸியுடனான தொடருக்கும் பயிற்சியாளராக ருமேஸ் ரத்நாயக்க நியமனம்
அவுஸ்திரேலியாவுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 தொடருக்கான இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளராக ருமேஸ் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கட் சபை இதனைத் தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்துடன் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து மிக்கி ஆர்த்தர் பதவி விலகியிருந்தார்.
இதனையடுத்து, கடந்த சிம்பாப்வே அணியுடனான கிரிக்கட் தொடரின் போது இலங்கை அணிக்கு இடைக்கால தலைமை பயிற்சியாளராக ருமேஸ் ரத்னாயக்க செயற்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் அவுஸ்திரேலியாவுடனான தொடருக்கும் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.