ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டங்களால் வெற்றி
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் 27ஆவது போட்டியாக இடம்பெற்ற ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
161 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 98 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.