அவுஸ்திரேலியாவுக்கு புதிய தூதுவர் – இலங்கை ஆராய்வு
அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவிருந்த ஜகத் வெள்ளவத்த, அந்தப் பதவிக்கு நியமிக்கப்படமாட்டார் என அறியமுடிகின்றது.
ஏற்கனவே, இவரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டிருந்த போதிலும் அந்த நியமனம் இறுதி செய்யப்படவில்லை.
இதற்கான காரணம் என்ன என்பது குறித்து உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.