அவன்ட்கார்ட் விவகாரம் – பொலிஸ் மா அதிபர் அதிரடி உத்தரவு !
அவன்காட் விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்த உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளர்.
முன்னதாக நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட 8 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் இன்று அறிவுறுத்தி இருந்தார்.
அவன்கார்ட் மிதக்கும் ஆயுதக் கப்பல் மோசடி சம்பந்தமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குற்றப்புலனாய்வு பிரிவிற்கு பதில் பொலிஸ் மா அதிபர் இன்று மாலை பணித்துள்ளார்.