அரசியல் மோதல் உச்சக்கட்டத்தில் – திலங்கவுக்கு தடை போட்டார் ஹரீன் !
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் முன்னாள் தலைவரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் எம் பியுமான திலங்க சுமதிபால , இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையில் எந்த பதவிகளையும் வகிப்பதற்கு தற்காலிக தடைவிதித்தார் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ.
முன்னதாக ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவர் பதவிக்கு ஊடக இராஜாங்க அமைச்சர் செய்த நியமனத்தை ஜனாதிபதி தரப்பு தடுத்து கூட்டுத்தாபனத்தை பாதுகாப்பமைச்சின் கீழ் கொண்டுவந்துள்ள நிலையில் சுதந்திரக் கட்சி எம் பியான திலங்க மீது இந்த தடையை பிரயோகித்துள்ளார் அமைச்சர் ஹரீன்.
இதனால் ஜனாதிபதி – பிரதமர் தரப்புக்கிடையிலான மோதல் மேலும் வலுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.