அமெரிக்க ஜனாதிபதிக்கு ஹொங்கொங்கில் பேரணி
ஹொங்கொங்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பாராட்டி ஜனநாயக மீட்புப் போராட்டக்காரர்கள் பேரணிகளை நடத்தியுள்ளனர்.
ஹொங்கொங்கின் ஜனநாயக மீட்புப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் ஒரு சட்ட ஆவணத்தில் அமெரிக்க ஜனாதிபதி கையொப்பமிட்ட நகர்வு ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு பெரும் உற்சாகத்தை வழங்கியுள்ளது.
மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பான இந்த சட்ட ஆவணத்தில் அமெரிக்க ஜனபாதிபதி கையொப்பமிட்டமை சீனாவை கடும் விசனத்துக்கும் உள்ளாக்கியுள்ளது.
இதுத் தொடர்பில் கருத்து வெளியிட்ட, குறித்த சட்டத்தை ஆதரிக்கும் போராட்டக்காரர்களில் ஒருவரான, சன்னி சியுங் “அமெரிக்க காங்கிரஸ் மற்றும் ஜனாதிபதி ட்ரம்பிற்கு நன்றி தெரிவிப்பதற்காகவே இந்த பேரணியை நடத்துகின்றோம்.’ எனத் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இதுத் தொடர்பில் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். ஹொங்கொங்கை ஆதரிக்கும் அமெரிக்கர்கள் ஹெங்கொங்கோடு ஒத்துழைக்கும் ஏனைய நாட்டவர்களுக்கும் நன்றி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.