அமெரிக்காவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியை கடந்தது
அமெரிக்காவில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு கோடியை கடந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் இரண்டு இலட்சத்து 16,593 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
இதன்படி, அமெரிக்காவில் தொற்றுறுதியானர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே ஒரு லட்சத்து 99,034 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அமெரிக்காவில் இதுவரையில் கொரோனா தொற்றினால் உயிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 50,381 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.