அதிரடியாக வாகன கடத்தல்- சந்தேக நபரை தேடும் பொலிஸ் (VIDEO)
மாவனெல்ல-வலகடயாய பகுதியில் கடந்த 2ஆம் திகதி சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியான வெகன்-ஆர் ரக கார் மற்றும் 4 கையடக்க தொலைபேசிகளை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மாவனெல்ல பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
அதன்படி, குறித்த சந்தேகநபர் தெஹிவளை-நிகபோவ வீதியில் வசித்து வருபவர் என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சந்தேக நபர் தொடர்பில் CCTV கமராக்களில் பதிவான காட்சிகள் மற்றும் படங்களை பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ளது.