அட்டன் மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு கலால் திணைக்களம் கடும் எச்சரிக்கை…
நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
அட்டன் பகுதியிலுள்ள மதுபான சில்லறை விற்பனை நிலையங்களுக்கு கலால் திணைக்களம் கடும் நிபந்தனை விதித்துள்ளது .
கொவிட் 19 தொற்று காரணமாக நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் நீண்ட நாட்கள் மூடப்பட்டிருந்தன.
இந் நிலையில்இன்று சில்லறை மதுபானம் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டன.
அட்டன் பகுதிகளிலுள்ள மதுபானம் விற்பனை நிலையங்களில் மதுபான போத்தல்களை கொள்வனவு செய்வோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்
அவ்விடத்திற்கு சென்ற அட்டன் பொலிஸாரும் அட்டன் கலால் திணைக்கள பொரறுப்பதிகாரி ஜானக பெரேரா மற்றும் அட்டன் டிக்கோயா நகரசபை சுகாதார பிரிவினர் இணைந்து மதுபான விற்பனை நிலையங்களுக்கு சென்று உரிமையாளர்களை எச்சரித்ததுடன் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என பார்வையிட்டன. மேலும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு வருகைதருவோர் சுகாதார முறைமையை பின்பற்ற வேண்டுமெனவும் எச்சரித்தனர்.