அட்டன் எட்லி தோட்டத்தில் சிக்குண்ட சிறுத்தைப் புலி
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா
வேட்டையாட விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்குண்ட சிறுத்தையை மீட்க பொலிஸாரும் நல்லத்தண்ணி வனவிலங்கு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர்
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா எட்லி தோட்டதேயிலை மலை பகுதியிலே இன்று பகல் சிறுதைையொன்று வலையில் சிக்குண்டு இருப்பதை பிரதேசவாசிகள் கண்டுள்ளனர்
பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து மிருக வைத்தியரின் உதவியுடன் சிறுத்தைக்கு மயக்க ஊசியேற்றி மயக்கமடைய செய்து உயிருடன் மீட்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்