அடுத்துவரும் இரண்டு வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கது- உபுல் ரோஹண
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், கொரோனா தொற்றுறுதியாகி அடையாளம் காணப்படும் நோயாளர்களின் எண்ணிக்கையை விட, அடையாளம் காணப்படாமல் இருக்கும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்நாட்களில் பாடசாலைகளில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பாடசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
குறிப்பாக இந்நாட்களில் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக தெரிவித்த உபுல் ரோஹண, எதிர்வரும் இரண்டு வாரங்களில் பொதுமக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றாமல் செயற்படுவார்களாயின் சுகாதார பிரிவினர் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.