“அச்சத்திற்கு அடிபணிய வேண்டாம்” – புனித பாப்பரசர்
கொரோனா வைரஸ் பற்றிய “அச்சத்திற்கு அடிபணிய வேண்டாம்” என புனித பாப்பரசர் பிரான்சிஸ் மக்களை கேட்டுள்ளார்.
“மரண நேரத்தில் வாழ்க்கையின் தூதர்களாக” மனித இனம் இருக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான பாப்பரசர் சனிக்கிழமை மாலை தனது ஈஸ்டர் விழிப்புணர்வு உரையின்போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
கிட்டத்தட்ட யாரும் இல்லாத புனித பீட்டர்ஸ் தேவாலயத்தில் அவர் தனது உரையை ஆற்றினார்.
உலகின் 1.3 பில்லியன் கத்தோலிக்க சமூகத்தினர் இதனை நேரலையில் பார்வையிட்டுள்ளனர்.
உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவ நாட்காட்டியில் மிக முக்கியமான பண்டிகையான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடியுள்ளனர்.
மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பல தேவாலயங்களில் பக்தர்கள் இன்றி பிரார்த்தனைகள் இடம்பெற்றுள்ளன.
உலக நாடுகள் இப்போதுள்ள நிலையில் – ஏற்கனவே ஏழை நாடுகளுக்கு வழங்கிய கடன்களை இரத்துச் செய்ய வேண்டும் அல்லது குறைந்த அளவை மீறப்பெற வேண்டுமென்றும் பாப்பரசர் தனது உரையில் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.