Breaking News

SF லொக்கா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

அநுராதபுர தஹியாகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் திட்டமிடப்பட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபடும் SF லொக்கா எனப்படும் இரோன் ரணசிங்க உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த ‘SF லொக்கா’ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அநுராதபுரத்தில்  கடந்த2015ஆம் ஆண்டு இரவு விடுதி ஒன்றில் வைத்து கராட்டே சாம்பியனான வசந்தசொய்சா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான SF லொக்கா என்பவரே இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.