Breaking News

S 14 ரக புகையிரத பரீட்சார்த்த சேவை அட்டன்வரை..

 

-அட்டன் ராம் –

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட S 14 ரக புகையிரதத்தின் பரீட்சார்த்த சேவை இன்று நடைபெற்றது.

கொழும்பிலிருந்து அட்டன் வரையில் மேற்படி S 14 ரக புகையிரதம் பரீட்சார்த்த சேவை இடம்பெற்றதாக அட்டன் ரயில் சேவை கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த காலங்களில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து பதுளை வரையான ரயில் சேவையில் S 12 ரக புகையிரதமே சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும் மேற்படி புதிய ரயிலை இனி சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்