Breaking News

தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக மாளிகைக்காடு கிழக்கு..! மறு அறிவித்தல் வரை பூட்டு

அம்பாறை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அதிகார பிரிவிற்கு உட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் இன்று (14) 05 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து மாளிகைக்காடு கிழக்குப் பிரதேசம் மறு அறிவித்தல் வரை  தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இன்று கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள் நடமாடிய பகுதிகளை உள்ளடக்கியே இக்கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்தார்.

மேலும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரியின் நடவடிக்கைக்கு அமைய இப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதி மக்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.