இலங்கை

Exclusive ! – பொலிஸ் மா அதிபர் கைது  – ஜனாதிபதி அதிரடித் தகவல்  !

பொலிஸ் மா அதிபர் கைது  – ஜனாதிபதி அதிரடித் தகவல்  !
பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர கைதாகக் கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
அமைச்சரவை கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தபோது நாட்டின் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டன .
அப்போது பேசிய ஜனாதிபதி மைத்ரி , தாக்குதல் சம்பவங்கள் பாதுகாப்பு குறைபாடுகளால் நடந்துள்ளதால் பொலிஸ் மாஅதிபர் பதவி விலக வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
“ நான் அவரை பதவி விலக கேட்டுள்ளேன். ஆனால் அவர் இன்னமும் அதனை செய்யவில்லை. இப்போது நான் நியமித்த குழு பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை நடத்துகிறது.அதில் குற்றம் கண்டுபிடிக்கப்பட்டால்  இவர் ( பூஜித்த ) கைது  செய்யப்படலாம்.அதற்கு முன் இவர் பதவி விலகுவது நல்லது ”
என்றும் அமைச்சரவையில் சொன்னார் ஜனாதிபதி.
புர்க்காவை தடை செய்வது குறித்தும் இங்கு பேசப்பட்டுள்ளது.