இலங்கை

Breaking news – நூற்றுக்கும் மேற்பட்ட ஐ.எஸ் உறுப்பினர்கள் இலங்கையில் இருக்கலாம் – மைத்ரி பரபரப்பு தகவல் !

 

படைகளின் புலனாய்வுத்துறையை இந்த அரசு பலவீனமாக்கியதே நாட்டின் இந்த நிலைமைக்கு காரணமென உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் மத்தியில் இன்று காலை குறிப்பிட்டார் ஜனாதிபதி மைத்திரி

போதைப்பொருள் வர்த்தகத்துக்கும் அடிப்படைவாதத்துக்கும் தொடர்புகள் இருக்கலாம்.போதைப்பொருள் ஒழிப்பு முயற்சிகளும் குண்டுத்தாக்குதலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார் .

ஜனாதிபதி மைத்ரி தெரிவித்த கருத்துக்களின் சாராம்சம் –

புதிய பாதுகாப்பு செயலாளரை விரைவில் நியமிப்பேன் – ஐ ஜீ பி விரைவில் பதவி விலகுவார் – முஸ்லிம்களை தீவிரவாதிகளாக பார்க்க வேண்டாம்.அவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். – இராணுவத்தை பலவீனப்படுத்த எடுத்த முயற்சிகளால் தான் அரசுடன் மனஸ்தாபம் ஏற்பட்டது – எனக்கு பொலிஸ் மா அதிபரோ பாதுகாப்பு செயலாளரோ எதனையும் சொல்லவில்லை. இந்த பொறுப்பில் இருந்து விலக நான் முயற்சிக்கவில்லை – ஒட்டுமொத்த அரசும் பொறுப்பேற்க வேண்டும் – வெளிநாட்டு படைகள் இங்கு வராது.ஆனால் விசாரணைகளுக்கு வெளிநாட்டு உதவிகள் பெறப்படும் . நட்பு நாடு ஒன்று புலனாய்வு தகவல்களை வழங்கி தாக்குதல் எப்படி – எந்த வகையாக இருக்கலாமென கூறினாலும் அது வெளிவரவில்லை – பொறுப்பை தட்டிக்கழித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை – ஐ எஸ் அமைப்புக்கு இங்கு கால்வைக்க இடமளியேன் – புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டதால் அவர்களை பாதுகாக்க நான் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தேன் – 70 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர் – இலங்கையில் சுமார் 130 -140 வரை ஐ எஸ் உறுப்பினர்கள் இருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது . அவர்களை கைது செய்து அந்த இயக்கத்தை முற்றாக ஒழிப்போம் .

இப்போதுள்ள சட்டங்கள் தவ்ஹீத் ஜமாத்தை தடை செய்யும் வகையில் இல்லை.அதற்காக விரைவில் புதிய சட்டங்கள் உருவாக்கப்படும் .