கம்பஹாவில் ஆயுதங்கள் மீட்பு: ஒருவர் கைது..!
கம்பஹா-மிரிஸ்வத்தயில் விசேட அதிரடிப்படை நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 8 துப்பாக்கிகளும் அவற்றிற்குரிய பெருந்தொகை ரவைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.