இலங்கை

Breaking news ! இன்ரபோல் பொலிஸார் இலங்கை விரைவு !

 

இலங்கையில் இடம்பெற்ற தொடர் தாக்குதல்கள் குறித்தான இலங்கையின் விசாரணைகளுக்கு உதவும் வகையில் இன்ரபோல் பொலிஸார் இலங்கை விரைகின்றனர்.

வெடிமருந்து – தடயவியல் மற்றும் குற்றச் சம்பவங்களின் நிபுணர்கள் குழு ,இலங்கையின் கோரிக்கைக்கமைய கொழும்பு புறப்பட்டுள்ளது.

இலங்கை மேலும் உதவிகளை கோரினால் செய்யத்தயாராக இருப்பதாக கூறும் இன்ரபோல் பொலிஸின் தலைமை அதிகாரி ஜூர்கன் ஸ்டொக் ,தமது தரவுகளில் உள்ள ஆதாரங்களை வைத்து இந்த தாக்குதல்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் பலரை கைது செய்ய முடியுமென தெரிவித்துள்ளார்.